Loading...
சீரற்ற வானிலை
இன்றைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் கன மழை பெற்து வருகிறது.
Loading...
இந்நிலையில், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றையதினம் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































