Loading...
அநுராதபுரத்தில் இன்று(2) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சகரவண்டி ஒன்று வீதியினை விட்டு விலகியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 41 வயதான தந்தையும், 14 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.
Loading...
அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்த 46 வயதான தாயும், 9 வயதான மகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading...








































