இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவ திட்டத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக சில பிரதான வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுக்கு பதிலாக மாற்று உணவுகளை வழங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதார ஊழியர்கள் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கி வரும் நிலையில்,வைத்தியர்கள்,தாதியர்,உணவு தயாரிப்பாளர்கள் போன்றோர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மாற்று உணவு
எனினும், வைத்தியசாலைகளில் தற்போது வழங்கப்படும் மாற்று உணவுகளுக்கு பதிலாக உரிய உணவுகளை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை ஒரே நேரத்தில் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








































