Loading...
வத்தளையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்ட ஆணொருவருடையது என தெரிவிக்கப்படுகிறது.
Loading...
கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் சடலம்
அத்துடன் சடலத்தின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...








































