சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக தாம் ஒரு போதும் கூறியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்து முன்மொழிவுகள்
சர்வகட்சி அரசாங்கமொன்றிற்காக தமது கட்சி பத்து முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவுகளை கருத்திற் கொண்டு பொதுத் தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றதா என்பது உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதற்கு ஆதரவளிக்கும் தேவை ஏற்பட்டால் அது குறித்து மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.








































