Loading...
அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading...
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் கோரியிக்கை வைப்போம் என்றும் சி.வி.விக்னேஷ்வரன் கூறினார்.
Loading...








































