Loading...
கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு புகையிரத பயணச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2600 ரூபாய் பயணச்சீட்டை 7300 ரூபாயிற்கு சந்தேகநபர் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இந்த பயணச்சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்த போது, புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Loading...
குறித்த நபரிடம் இருந்து மற்றொரு முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே பாஸ் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
64 வயதான சந்தேகநபரை இன்று கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...








































