புத்தளம் குருனாகல் வீதியின் வில்லுவத்தைப் பகுதியில் நேற்று இரவு இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வீரரொருவர் கத்திக்குத்துக்கு இழக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வழுப்பெற்றதினாலே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
ஓய்வுப் பெற்ற முன்னாள் இராணுவ வீரர்
குறித்த கொலைச்சம்பவத்தில் 43 வயதுடைய ஒருவரே உயிரந்துள்ளார். உயிரிழந்த நபர் ஓய்வுப் பெற்ற முன்னாள் இராணுவ வீரரொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குட்செட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.








































