Loading...
அதிக உணவுப் பணவீக்கம் காரணமாக, அதிகளவில் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நாடுகள் தொடர்பில், உலக வங்கியின் தரப்படுத்தலில், இலங்கை 7ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தத் தரநிலைக்கு அமைய, இலங்கையின், உணவுப் பணவீக்கம், 74 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு பணவீக்கம்
உலக வங்கியின் உணவு பாதுகாப்பு தொடர்பான புதிய அறிக்கையின் அடிப்படையில், இவ்வாறு தரப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...
குறித்த தரப்படுத்தலில், சிம்பாப்வே, லெபனான், வெனிசுவெலா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.
கடந்த ஆண்டு 83 சதவீத உணவு பணவீக்கத்துடன், இலங்கை இந்த பட்டியலில் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, இந்த ஆண்டு உணவுப் பணவீக்கம், 9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
Loading...








































