- 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
- சாம்பியன் பட்டம் வென்ற யு 19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல் மந்திரி வாழ்த்து தெரிவித்தார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. இதன்மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த திறமையான இளம் பெண்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர். இந்த சாம்பியன்கள் நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு ஒரு உத்வேகம். இந்த வரலாற்று வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என பதிவிட்டுள்ளார்.