திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருவோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் (14.02.2023) முற்படுத்தியபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், திருகோணமலை- ஜமாலியா பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் இர்பான் (35வயது) எனவும் அவரிடம் 2700 மில்லி கிரேம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கன்னியா- பீலியடி பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா கௌரிதாஸ் (47வயது) என்ற பெண்ணிடம் 2520 மில்லி கிரேம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்ததாகவும் அவர்கள் போதைப்பொருள் விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.