இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பாகிஸ்தானியரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்க இந்திய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விசாரணைக்கான அனுமதி நேற்றையதினம்(23.05.2023) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கேரளா கடலில் 25 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் இந்த பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
5 நாட்களுக்கு விசாரணை
இதனையடுத்து அவர் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை 5 நாட்களுக்கு தமது காவலில் வைத்து விசாரணை செய்ய, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவு நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தது.
இந்த கோரிக்கையின் பின்னரே கேரள நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.