கோட்டா முறையிலேனும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நிச்சயமாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தை
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்கு பெற்றுக் கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








































