வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்று அமைச்சர் மனூஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் மூலம் தடுக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிலையான நாடொன்றுக்காக அனைவரும் ஒரே வழியில் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் நேற்று (20.06.2023) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மனூஷ நாணயக்கார மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சகம் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் கூறினார்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்குக் கடந்த காலத்தில் தடை விதிக்கப்பட்டது.
ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தின் ஐந்து அல்லது ஆறு முக்கிய நோக்கங்கள் உள்ளதாகவும், அதில் முதலாவது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்பது எனவும் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.








































