Loading...
வலஸ்முல்ல, மோதரவன யஹமுல்ல பகுதியில் நேற்றிரவு (21.06.2023) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் குழாய் பதிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
Loading...
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விளக்கம்
சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Loading...








































