Loading...
பொகவந்தலாவை பிரதேசத்தில் தாய் ஊட்டிய உணவு தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இச்சம்பவமானது பொகவந்தலாவை பிரிட்வெலி பிரதேசத்தில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
தொண்டையில் சிக்கிய குழந்தை
குழந்தையின் தாய் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்ட்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...








































