வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றின் சித்திர ஆசிரியர் ஒருவர் பதின்மூன்று வயது மாணவனை கழுத்தைப் பிடித்து இழுத்து தலை மற்றும் காதுகளில் தாக்கியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை வயங்கொடை காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனுப்பி வைத்துள்ளது.
கம்பஹா வைத்தியசாலையில்
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாணவன் மேசையில் தலை வைத்து உறங்குவதைப் பார்த்த சித்திர ஆசிரியர், மாணவனிடம் வந்து காரணமின்றி தாக்கியதாக காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வெயாங்கொடை காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.