சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக விண்னில் செலுத்தவுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தின் நேர கணிப்பை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை நேரப்படி, பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நேரக்கணிப்பு 25 அரை மணித்தியாலங்களாக வரையறுக்கப்படுகின்றது.
இதற்கமைய, நாளை பிற்பகல் 2.35க்கு குறித்த சந்திரயான் விண்கலம் விண்னுக்கு ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரனுக்கு அனுப்பப்படும் மூன்றாவது விண்கலம் இதுவாகும்.
முன்னதாக, சந்திரயான் -2 விண்கலம் விண்னுக்கு ஏவப்பட்ட நிலையில், ஆய்வினை முன்னெடுக்கும் ரோவர் பகுதியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, அந்த திட்டம் தோல்வியடைந்திருந்தது.
எனினும், தற்போது ஏவப்படவுள்ள புதிய விண்கலத்தின் சகல தொழிற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அதற்கான எரிபொருள் நிரப்பு பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.








































