யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின.
இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 300 பட்டங்களும், எட்டாவது அமர்வில் 94 உயர் பட்டங்கள், 66 தகைமைச் சான்றிதழ்களும், 166 பட்டங்களும், வழங்கப்படவுள்ளன.
இன்றைய அமர்வுகளில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம், சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வெளியேறிய பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், 33 பேர் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழையும், 02 பேர் உடற்கல்வியில் தகைமைச் சான்றிதழையும், 05 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச்சான்றிதழையும், 20 பேர் நுண்நிதியியலில் தகைமைச் சான்றிதழ்களையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், மூவர் வியாபார முகாமைத்துவத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








































