Loading...
ஏத்கல காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொஸ்கொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கம்பளை – கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
Loading...
சந்தேக நபர் கைது
கொலையை செய்ததாக கூறப்படும் 69 வயதுடைய சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏத்கல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































