வாரியபொல – மாதம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக வாரியபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சாரதி தப்பியோட்டம்
விபத்தின் போது பலத்த காயமடைந்த இருவரையும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 48 வயது தந்தை மற்றும் அவரது 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை தேடும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








































