Loading...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி செப்டெம்பர் 14 முதல் 24 வரை குறித்த பேச்சுவார்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை குறித்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் இறுதிக் கலந்துரையாடல் ஜனாதிபதியுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இறுதிக்கட்ட கலந்துரையாடல் நிறைவடைந்த பின்பு இரண்டாம் தவணை விரிவான கடனுதவி பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...








































