Loading...
திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூரு விளைவித்த சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
Loading...
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள அணிவகுப்புக்காக திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்றும் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...