வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி ஓமம் வளர்த்து வசந்த மண்டப பூசைகளுடன் நேற்று(24.09.2023) ஆரம்பமாகிய அலங்கார உற்சவம் நாகதம்பிரான் உள் வீதி சுற்றலுடன் பூசைகள் நிறைவு பெற்றுள்ளது.
திருவிழாக்கள்
இதனை தொடர்ந்து 11 தினங்கள் இடம்பெறும் திருவிழாக்களில் சிறப்பு திருவிழாக்களாக, 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கப்பல் திருவிழாவும், முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி திங்கட்கிழமை சப்பர திருவிழாவும், மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை சமுத்திர தீர்த்தமும், நான்காம் திகதி புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.








































