குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப வன்முறை
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையில் அவர்களது வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுடன், அதன் போது மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.
மேலதிக சிகிச்சை
கழுத்து மற்றும் இடது காலில் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.








































