நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
மனிதரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான சம்பளம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்
மேலும், பத்திரிக்கை நிறுவனங்களினால் வழங்கப்படும் ஊதியம் போதுமானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று இதனை தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்கு செய்திகளை எடுத்துச்செல்லும் ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டால் தகவல்கள் சென்றடைவது தடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.