வாட்ஸ் அப் நிறுவனம் இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட்டு இருப்பதால் பயனர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அதன் பயனர்களை தொடர்ந்து உற்சாகத்துடன் வைத்து இருக்கும் நோக்கில் புதிய புதிய அப்டேட்களை குறுகிய கால இடைவெளிகளில் வெளியிட்ட வருகின்றனர்.
அந்த வகையில், வாட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான சேனல் வசதி, இமோஜ் ரியாக்சன் அம்சம், வீடியோ சாட் வசதி ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தது.

தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் கூடுதலாக இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட்டு தங்கள் பயனர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.
முதல் அப்டேட்டாக, வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட சாட்களை போன்று வாட்ஸ் அப் சேனலின் சாட்களிலும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டாவதாக, சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் புதிய வசதியை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.








































