தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுவலட்சுமி. இவர் தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் என்ரி கொடுத்தார்.
நடிகை சுவலட்சுமி
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானார். ஆசை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், லவ் டுடே என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இந்த படத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த சுவலட்சுமி தமிழில் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தள்ளினார். இவருக்கு இன்றும் தமிழ் சினிமாவை பொருத்த வரையில் மிகுந்த மதிப்பு காணப்படுகின்றது.
நடிகை சுவலட்சுமி கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட வங்காளத்தை சேர்ந்த சுவாகதோ பானர்ஜி என்பவரை 2002- இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல்களில் நடித்து வந்தார்.
தற்போது சுவலட்சுமி தொழிலதிபரான தனது கணவருக்கு உதவியாக சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








































