பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பெண்களுக்கு தாலி கயிறு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
திருமணத்தின் அடையாளமாக இருக்கும் தாலியை கடவுளுக்கு நிகராக பெண்கள் கருதுகிறார்கள். தாலி கட்டும் பொழுது மஞ்சள் கயிற்றில் போடுவார்கள்.
பின்னர் வசதி இருக்கும் பெண்கள் தாலி கயிற்றை மாற்றி சங்கிலியில் போடுவார்கள்.
அப்போது ஏற்படும் தவறுகள் காரணமாக காலங்காலத்திற்கு விளைவுகள் தொடரும் என ஜோதிடம் கூறுகின்றது. இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
1. தாலி அணியும் பெண்கள் ஆடைக்கு மேல் அதாவது வெளியில் தெரியும்படி அணியக் கூடாது. மீறி வெளியில் போடுபவர்களுக்கு கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும்.
2. தாலி அணிந்திருக்கும் கயிற்றை அடிக்கடி மாற்றக் கூடாது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். இதன்படி, திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை ஆகிய தினங்களில் மாற்றலாம்.
3. வருடத்தில் ஒரு முறை வரும் “ஆடிப்பெருக்கு” தினத்தில் தாலி கயிற்றை மாற்றலாம். இப்படி மாற்றும் பொழுது கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
4. வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கேற்றி தீபாராதனை காட்டும் பொழுத அப்படியே தாலிக்கும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
5. புகுந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தாலி கயிற்றை நெஞ்சு குழிக்கு கீழையும், தொப்புள் பகுதிக்கு மேலேயும் இருக்கும் படி போட வேண்டும். இதை தவறும் பட்சத்தில் கணவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம்.
6. தாலி கயிற்றை மாற்றும் போது தனிமையில் அல்லது பூஜை அறையில் மாற்ற வேண்டும். மற்றவர்களின் கண் பார்வையில் படக்கூடாது.
7. நம்முடைய தாலியை அம்மாவோ அல்லது சகோதரிகளிடமோ பார்க்க கூடாது.
8. காலை நேரத்தில் சூரியன் இருக்கும் திசையை பார்த்து அமர்ந்து புது கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு பழைய கயிற்றை அவிழ்க்க வேண்டும்.