ஃபெங்கல் புயலானது சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபெங்கல் புயலானது சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே நவம்பர் 30 -ம் திகதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஃபெங்கல் புயலானது சென்னைக்கு தெற்கே கடப்பதால், நவம்பர் 29 மற்றூம் 30 -ம் திகதிகளில் சென்னையில் அதிகனமழை பெய்யும்.
மேலும், புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் புயல் கரையை கடக்கும் 30 -ம் திகதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.