தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தனுஷ்- ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக இருந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது லிங்கா, யாத்ரா என்று இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை போன்று இருவரும் சினிமாவில் படு ஆக்டிவாக இருப்பவர்கள், யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென இருவரும் அவர்களின் விவாகரத்து செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள்.
இதனை ரசிகர்கள் உட்பட குடும்பத்தினராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்தது. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 27ஆம் திகதி 2024 இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
ஐஸ்வர்யா செய்த காரியம்
இந்நிலையில், விவாகரத்து பெற்று பிரிந்தவர்கள் சமூக வலைத்தளங்களிலும் படங்களை நீக்கி, பின்தொடர்புகளை இல்லாமலாக்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வாறு செய்யவில்லை.
மாறாக அவரோ புத்தகம் வாசிப்பது, சைக்கிளிங் செல்வது, கோவில்களுக்கு செல்வது, யோகா செய்வது, ஜிம்மில் workout செய்வது என படுபிசியாக இருந்து வருகிறார்.
அதே சமயம் தனுஷ், சினிமாவில் இயக்கம், நடிப்பு என பிசியாக இருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்து வரும் நிலையில், “தற்போதும் கூட ஒன்னும் பெரிதாக நடந்துவிடவில்லை. அந்த விவாகரத்து பத்திரத்தை கிழித்து போட்டுவிட்டு மீண்டும் சேர்ந்து வாழுங்கள்..” என ஐஸ்வர்யாவிடம் தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.








































