உலகில் மிகவும் அறிவானவர்களை கொண்ட நாடு எது என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த நாடு?
உலகிலேயே மிகவும் அறிவானவர்கள் என்றால் நாம் முதலில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இருப்பார்கள் என்று தான் நினைப்போம். ஆனால், ஆசிய நாடு ஒன்றில் தான் அறிவானவர்கள் அதிகம் இருக்கின்றனர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய அறிவியலாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளால் உலகத்தையே மாற்றி அமைத்துள்ளனர்.
தங்களது புதுமையான கண்டுபிடிப்புகள் மூலமாகவும், அசாதாரண திறமையின் மூலமாகவும் உலகுக்கு பல சேவைகளை செய்கின்றனர்.
இந்நிலையில், உலகில் அறிவானவர்கள் அதிகம் எந்த நாட்டில் இருக்கின்றனர் என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் படி, உலகில் அதிகமான அறிவாளிகளை கொண்டிருக்கும் நாடு ஜப்பான் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் ஈரான், இத்தாலி, தென்கொரியா, நாடுகள் உள்ளன.
அறிவாற்றலை அளவீடு செய்யும் குறியீடு IQ (Intelligence Quotient) ஆகும். இந்த IQ அளவை ஜப்பான் மக்கள் 112.30 IQ பாயிண்ட் வரை பெற்றுள்ளார்கள்.
இவர்களிடத்தில் பிரச்னையை தீர்க்கும் அதிக ஆற்றல் உள்ளது. மேலும், மற்ற நாடுகளை விட புத்தி கூர்மையுடைய மக்கள் ஜப்பானில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.








































