இஸ்ரேல்(Israel) – ஹமாஸ் போரை உலகிற்கு புகைப்படங்களின் மூலம் காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா உயிரிழந்துள்ளார்.
இவர் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்பத்துடன் பலி
இந்த தாக்குதலில் இவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார் என கூறப்பட்டுள்ளது.
ஹசௌனா ஓகஸ்ட் 2024 இல் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில்,
நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்.
உலகம் கேட்கும் ஒரு மரணத்தை, யுகங்கள் முழுவதும் நீடிக்கும் ஒரு விளைவை, காலமோ இடமோ புதைக்காத அழியாத படங்களை நான் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மையம் (PJPC) ஹசௌனாவின் இழப்பிற்கு இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.








































