Loading...
மட்டக்களப்பு , சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதியில் இன்று (7) அதிகாலை 6 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதேச மக்கள் குறித்த முதலையை பாதுகாப்பாக மடக்கி பிடித்தனர். அதோடு உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதேவேளை அண்மைக்காலமாக மட்டக்களப்பில் குடிமனைப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...


Loading...








































