வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு, மீடியாக்களில் கிளப்படும் சர்ச்சைகளுக்கு நடிகர் ரவிமோகன் முடிவுக்கட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களில் ஒருவர் தான் ரவிமோகன்.
வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு, மீடியாக்களில் கிளப்படும் சர்ச்சைகளுக்கு நடிகர் ரவிமோகன் முடிவுக்கட்டியுள்ளார்.
விவாகரத்து வழக்கு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி, விவாகரத்து கேட்பதற்கு முன்னர் ரவி மோகன் தன்னை கலந்தாசிக்கவில்லை என கூறி அறிக்கையொன்றை வெளியிட்டு இணையவாசிகளிடையே அதிர்ச்சி கிளப்பினார்.
ஆர்த்தி மற்றும் அவரது தாயின் கட்டுப்பாட்டில் ரவி மோகன் இத்தனை வருடம் இருந்ததாகவும் அவரது சொத்துக்களை ஆர்த்தி அபகரித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மனைவியை பிரிந்த ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகின. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் தங்கள் குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு, பிரச்சினையை பெரிதாக்கியுள்ளனர்.
இருதரப்பினர் தாக்கல் செய்த மனு
தன்னை அசிங்கப்படுத்திய ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார்.
அதே சமயம், ஆர்த்தி தரப்பில் இருந்து, தனக்கும் தன் இரு மகன்களுக்கும் ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தார்.
இதன்படி, தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடைவிதிக்கக்கோரி, ரவிமோகன் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தடை விதிக்கப்பட்டது
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ரவிமோகன் தாக்கல் செய்த மனு மீது புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, “தங்களுக்கு இடையேயான பிரச்சனையை ரவிமோகன்- ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி அறிக்கைகளாக வெளியிடக் கூடாது” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், ரவி மோகன்- ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை
ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் பற்றிய வதந்திகளை மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு சென்ற மீடியாக்களில் ரவி மோகன் விவாகரத்து குறித்து போடப்பட்டிருக்கும் செய்திகளை அகற்றுமாறு ரவிமோகனின் வழக்கறிஞர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் ரவிமோகன்- ஆர்த்தி இருவரையும் பதிவுகள் போட வேண்டாம் எனக் கூறிய நிலையில், வழக்கறிஞரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதே போன்று, அப்படி பதிவுகள் போட்டிருப்பவர்கள் 24 மணி நேரத்திற்கு அந்த பதிவுகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் குறித்த ஊடகம் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள்,“ஏ. ஆர் ரஹ்மான் பானியில் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா?..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.