பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு ஜெயிக்கிற குதிரையாக ஓடப்போகும் மூன்று ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார். அதில் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள் அடங்குவார்.
அந்த வகையில், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் ஜெயிக்க பிறந்தவர்களாக வாழப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜெயிக்க பிறந்த ராசிக்காரர்கள்
ரிஷபம்
2025 இனி வரும் மாதங்கள் புதிய தொடக்கங்களுக்கும் துணிச்சலான தேர்வுகளுக்கு சரியான காலமாக இருக்கும். உங்களின் விடாமுயற்சி உங்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதற்காகவே பிறந்தவர்கள் போன்று ஜொலிக்க வாய்ப்பு உள்ளது. புதிய நபர்களுடன் பழகும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சி செய்வது அவசியம்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்ததாகவும், வாழ்க்கையை மாற்றும் மாற்றங்களாலும் நிறைந்ததாகவும் இருக்கும். 2025 ஆம் ஆண்டு பெரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது. ஆண்டு முழுவதும் புதிய சவால்களை எதிர்க் கொள்ள வேண்டி இருக்கலாம். உற்சாகமான ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு மிகவும் முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். சமூக உறவுகளை சிறப்பாக பயன்படுத்தினால் நீங்கள் சமூகத்தில் முக்கியமான புள்ளிகளில் ஒருவராக மாறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு நிறைய மகிழ்ச்சிகரமான ஆச்சரியங்களை பார்ப்பார்கள். பயணம் செய்வதற்கு எல்லையே இருக்காது. உங்கள் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை மீதான ஆர்வம் காரணமாக நீங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். சனியின் பின்னோக்கிய காலம் புதிய கண்டுபிடிப்புக்களை அதிகப்படுத்தும். புதுமையான யோசனைகள் மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் பார்வை நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் சாதனைகளுக்கான கதவைத் திறக்கும்.








































