வவுனியாவில் இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரகீத் சுரங்க வீரத் வழிகாட்டலில் வவுனியா நகரப் பகுதியில் திடீர் சோதனையை மேற்கொள்ளப்பட்டது.
கைது
இதன்போது, மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் உடமையில் இருந்த 6 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் வவுனியா மருக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுயை நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








































