சீனாவில் பயிரிடப்படும் நெற்பயிர்களில் இரசாயன உரங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனையே நாம் இலங்கைக்குள் பெறவுள்ளோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்றுமுந்தினம் ஆற்றிய கொள்கைப் பிரடகனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
சீனாவில் உள்ள மக்கள் குறைந்த இரசாயனங்கள் மூலம் பயிரிடப்பட்ட அரிசியை சாப்பிடுகிறார்கள். இந்த அரிசி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஏனென்றால், சீனாவின் மண் மிகவும் மாசுபட்டது மற்றும் இரசாயனங்கள் நிரம்பியுள்ளது. சீனாவில் உள்ள மக்கள் கூட தங்கள் சொந்த பொருட்களை சாப்பிட விரும்பவில்லை. இதே இரசாயன பொதி செய்யப்பட்ட அரிசிதான் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படும்.
சீனாவிடமிருந்து இந்த நன்கொடையைப் பெறுவதன் மூலம், அரச தலைவரும் அரசாங்கமும் அவர்களின் சொந்த கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகவும், இலங்கையில் மக்கள் இரசாயனப் பயிரிடப்பட்ட உணவை உட்கொள்வதை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்








































