தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும் எண்ணம் ஆளும் கட்சிக்கு இல்லை என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
“பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை.
அடுத்த மூன்று வருடங்களில் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம்.
அரசாங்கத்தினதும் அரசதலைவரினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம்” என்றார்.








































