Loading...
அரசாங்கம் முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களில் எவ்வித குறைப்பாடுகளும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தலங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதே பாரிய பிரச்சினையாகும்.
Loading...
எனவே , சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...








































