Loading...
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரேரணைகளின் பட்டியலை அரசாங்கத்திடம் முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்று கூடிய அகில இலங்கை செயற்குழுவும் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Loading...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் ஸ்திரமின்மையைக் கருத்தில் கொண்டு, தற்போது இலங்கையில் நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, பிரேரணைகளின் பட்டியலை அரசாங்கத்திடம் முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அக்கட்சி தொகுத்துள்ள பட்டியலில் உள்ளூர் பொருளாதார நெருக்கடி, பசுமை விவசாயம் மற்றும் ஆட்சிமுறை உள்ளிட்ட 15 தலைப்புகள் இடம் பெறும்.
Loading...








































