Loading...
ராகம மருத்துவ பீடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மருத்துவ மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட ஒன்பது சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் ஹேஷான் டி சில்வா இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
Loading...
சந்தேக நபர்களில் இருவர் இன்று (07) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...








































