Loading...
இலங்கையில் உள்ள முன்னணி கோடிஸ்வர வர்த்தகர்களுடன் அதி முக்கியமான சந்திப்பு ஒன்றை இன்று நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இதனடிப்படையில், இந்த வர்த்தகர்களுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் உள்ள பிரபலமான வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, ஒஷார நாணயக்கார, சுமல் பெரேரா உட்பட 20 முன்னணி வர்த்தகர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
Loading...
நாட்டில் தற்போது ஏற்பட்டு்ளள பொருளாதார நெருக்கடி சம்பந்தமாகவும், அதனை தீர்ப்பதற்கான வர்த்தகர்களிடம் உள்ள யோசனைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, அவர்களின் யோசனைகளை பகிர்ந்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































