தங்கத்தின் விலை இன்று (23) உலக சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதன்முறையாக 4,400 அமெரிக்க டொலரைத் தாண்டி, தற்போது 4,500 அமெரிக்க டொலரை நெருங்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இராணுவ மற்றும் வர்த்தக மோதல்கள்
அதன்படி, அடுத்த ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என்ற முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கை,
உலகெங்கிலும் உள்ள பல்வேறு இராணுவ மற்றும் வர்த்தக மோதல்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடாக தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவது மற்றும் உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பில் ஏற்பட்ட சிறிய சரிவு, பிற நாணயங்களைப் பயன்படுத்தும் நாடுகள் தங்கத்தை வாங்குவதை ஒப்பீட்டளவில் எளிதாக்குதல் போன்றன திடீர் தங்க விலை உயர்வுக்கு காரணமாகும்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








































