Loading...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மக்களுக்கு கஷ்டங்கள் இல்லாத மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அரசாங்கத்தை அமைக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் நடபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Loading...
நீண்டகாலமாக நாட்ட ஆட்சி செய்த இரண்டு கட்சிகள் முழு நாட்டை அழித்து விட்டன. தற்போது மக்கள் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் இவர்களில் மகிழ்ச்சியடையும் அணியும் இருக்கின்றது. அந்த அணி திருடர்கள் மற்றும் அரசியல்வாதிகளை நம்பி வாழும் வர்த்தகர்கள் அணி எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
Loading...








































