Loading...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் விடுமுறையில் இலங்கை வந்திருந்த, விமுக்தி, நீண்ட நாட்கள் கம்பஹா ஹொரகொல்லையில் தங்கி இருந்த, பின்னர், இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
Loading...
எனினும் அவர் சில வாரங்களுக்கு பின்னர், மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளமை தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கதைகள் பரவி வருகின்றன. விமுக்தி குமாரதுங்க, அரசியலில் ஈடுபடும் நோக்கில் இவ்வாறு அவசரமாக இலங்கைக்கு வந்திருக்கலாம் என பலர் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என விமுக்தி பல முறை தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...








































