Loading...
கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டு வந்த ஒருதொகை கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று காலை நீர்கொழும்பு லெல்லம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Loading...
குறித்த கேரள கஞ்சா சுமார் 570 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் பெறுமதி 84 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































