Loading...
இன்று இரவு கொழும்பு துறைமுகத்திற்கு எரிவாயு கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது.
நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவற்றை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
Loading...
அத்துடன், சரக்கு இறக்கப்பட்டதும் உடனடியாக விநியோகத்தை ஆரம்பிக்குமாறு லிட்ரோ நிறுவன தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, மற்றொரு எரிவாயு எரிவாயு எதிர்வரும் மே 19 நாட்டை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...








































