Loading...
மின் பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்காக தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவு செய்யுமாறும் மின்சார சபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.
Loading...
மேலும் குறித்த மின்பட்டியலை பெறும் சேவைக்காக தமது வாடிக்கையாளர்களை குறுஞ்செய்தி ஊடாகவும் பதிவு செய்வதற்கு இலங்கை மின்சார சபை ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கிறது.
அதன்படி, இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களை “EBILL” <இடைவெளி> கணக்கு இலக்கம் <இடைவெளி>மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து,1989 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவுசெய்துகொள்ளுமாறு கோரியுள்ளது.
Loading...








































