Loading...
கொழும்பு – பாலத்துறை பிரதேசத்தில் 15 கோடியே எண்பத்தேழு இலட்சத்து 35,000 பெறுமதியான இரத்தினக் கற்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருந்துவத்தை – அலெக்ஸான்ட்ரா பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 8ஆம் திகதி இரத்தினக் கற்கள் அடங்கிய பெட்டகம் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
Loading...
அதன்படி, சுமார் 16 இரத்தினக் கற்கள் இவ்வாறு கொள்ளையிட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Loading...








































